பசுமை வடுகை

வராக நதிக்கரை வடுகை சொந்தங்களுக்கு ….

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வராக நதிக்கரை வடுகை (வடுகபட்டி பேரூராட்சி) மண்ணின் மைந்தர்களின் மகத்துவக் கூட்டு இயக்கம். மறுமலர்ச்சியை நோக்கிய நல் மனங்களின் இனிய தொடக்கம்.

வடுகையை “பசுமை வடுகையாக” உருவாக்குவதே நமது தலையாய நோக்கம். எண்ணிய எண்ணம் ஈடேற நாம் எல்லோரும் ஒன்று கூடி செயல்படுவோம்.

கண்ணின் இமையாய் நாம் இருந்து நம் தாய் மண்ணை காத்திடுவோம்.

ஒன்றுபடுவோம் ஊருக்காக !. வெற்றி நிச்சயம் ….

 

திருக்குறள் 1023:

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

பொருள் உரை: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.