கோரானா வைரஸ் ஒழிப்புபோராட்டம் – கணக்கெடுப்பு
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்றைய கோரானா வைரஸ் ஒழிப்புபோராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நாம் துணிவுடன் எதிர்ப்போம்.
நமது ஊரின் பேரூராட்சி அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார், நமது ஊரில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளிலும் தற்பொழுது வசிக்கும் அனைத்து நபர்களின் விவரத்தை நாளை காலை (2-4-20) பதினோரு மணிக்குள் கணக்கெடுப்பு செய்து ஒப்படைக்க வேண்டும் அதற்கு நமது பசுமை வடுகையின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
இந்த உரிய தருணத்தில் அனைத்து உறுப்பினர்களும் தயவுசெய்து இதில் பங்கேற்க வேண்டுகிறோம் இன்று(1-4- 20) மாலை 5 மணிக்குள் தங்களுடைய பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை நமது செயலர் திரு பரமன் அவர்களிடம் கொடுக்கவும்.
பேரூராட்சியின் சார்பாக நமக்கு அடையாள அட்டை கொடுக்கப்படும். நாளை(2-4-20) காலை7:00 மணிக்கு நமது பணியை துவக்கலாம். அன்பர்களே தயவுகூர்ந்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்முடைய அனைவரின் பங்களிப்பும மிக அவசியம்.
உடனே முன் வந்து பதிவு செய்யும்படி உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்,
நன்றி. உங்களுடைய நண்பர்கள் விருப்பம் இருப்பின் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கவும்.
செயலர் திரு பரமன், மொபைல் எண் : 9942052309