மரம் நடும் விழா

குறைந்த இடத்தில் அடர்ந்த வனம் – 2

442 views

பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக   22-1-2020 ( புதன்கிழமை) காலை 10:15 மணி அளவில் மியாவாக்கி-2  அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தென்புறம் உள்ள இடத்தில்  அருகில் “குறைந்த இடத்தில் அடர்ந்தவனம்” தொழில் நுட்ப முறையில் 1001 மரக்கன்றுகள் நடும் விழா இனிதே நடைபெற்றது, விழாவில் மாவட்ட துணை ஆட்சியர் செல்வி.D.சினேகா இ .ஆ.ப  கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடுதலை துவக்கிவைத்தார், நீர் ஆர்வலர் திரு.K.சக்திவேல் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், பசுமை வடுகை நிறுவனர் Dr.சி.செல்வராஜ் வரவேற்றார், வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கணேசன் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பசுமை வடுகை அமைப்பினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பசுமை வடுகை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

Leave a Response