கொரோனா – முதலமைச்சர் நிவாரண நிதி
06-July-2021, கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என ஏராளமானோர் நிதியுதவி அளித்து வந்த வகையில் பெரியகுளம் அருகில் இருக்கும் வடுகபட்டியில் பசுமை வடுகையின் சார்பாக அந்த இயக்கத்தின் நிறுவனர் மருத்துவர் திரு. சி.செல்வராஜ் அவர்கள் ரூபாய் ஒரு லட்சத்திற்கான (1,00,000) காசோலையை இன்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்ளும் பசுமை வடுகையின் மற்றொரு அம்சமாக இந்த நிவாரண தொகை பேரிடர் காலத்தில் தமிழக அரசுக்கு ஒரு சிறு உதவியாக இருக்கும்.
பசுமை வடுகையின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.