“பசுமை வடுகை” – இது ஒரு சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக நல நடவடிக்கையை பேணிகாக்க வடுகபட்டி தன்னார்வ இளைஞர் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு எழுச்சி இயக்கம்.
நமது இயக்கத்தின் முக்கிய நோக்கம் சமூக விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு , விவசாயம் மற்றும் விவசாய நிலங்களை பேணிக்காத்தல்.
செயல் திட்டங்கள்
- சீமை கருவேல மரங்களை வேரோடு அழித்தல்
- மரம் நடுதல்
- நிலத்தடி நீரை பாதுகாத்தல், நதி, கண்மாய், ஓடைகளை சீரமைத்தல்
- பாலிதீன் பயன்பாடுகளை அறவே ஒழித்தல்
- நகரை சுத்தமாக வைத்து இருத்தல், கழிவுநீர், குப்பை மேலாண்மை மற்றும் திறந்த வெளி கழிப்பறை பிரச்சனைகளை தீர்த்தல்.
- இயற்கை வளங்களை பேணிக்காத்தல்
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊக்குவிப்பு, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி…
திருக்குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
பொருள் உரை: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.