மரம் வளர்ப்பு விழா – வள்ளலார் கோவில் பகுதி
பசுமை வடுகை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி இணைந்து நடத்தும் மரம் வளர்ப்பு விழா நிகழ்ச்சியானது 06-09-2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் வள்ளலார் கோவில் செல்லும் ஆற்றுப்பாதை இருபுறங்களிலும் மரகன்றுகள் நடும் விழா இனிதே நடைபெற்றது..
நமக்கு உறுதுணையாக வடுகபட்டி வேளாளர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும், மாணவ மாணவியர்களும் கலந்துகொண்டு இந்த விழாவினை இனிதே சிறபித்தனர்.
இந்த விழாவிற்கு 1000 மரக்கன்றுகள் கொடுத்து உதவிய திரு.வாசு நாடார், சிங்கப்பூர் சோமசுந்தரம் மணிகண்டன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பசுமை வடுகை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி: உள்ளாட்சி முரசு மற்றும் திருச்சி மெயில் நாளிதழ்