மரம் நடும் விழா

பனை விதை நடும் திருவிழா

242 views

வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பசுமை வடுகை இணைந்து நடத்திய மாபெரும் பனை விதை நடும் திருவிழா இன்று(25-10-2019) கட்டையன் ஊருணியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடுகபட்டி பள்ளி மாணவ மாணவியரின் “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” விழிப்புணர்வு பேரணி வடுகபட்டி பகவதி அம்மன் கோவிலிலிருந்து ஊருணி வரை நடைபெற்றது. பின்பு ஊருணியில் தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K. மோகன் குமார் அவர்கள் முன்நிலையில் பசுமை வடுகை நிறுவனர் டாக்டர் சி.செல்வராஜ் அவர்கள் தலைமையில் பனைவிதை விதைத்தல் நிகழ்ச்சி திருமதி R. வனிதா மற்றும் திரு. M.சுரேஷ் கிராம நிர்வாக அலுவலர் துவக்கி வைத்தனர்.  திரு எஸ்.கணேஷ் செயல் அலுவலர் வடுகபட்டி பேரூராட்சி நன்றியுரை கூறினார்.  ஊருணியின் கரைகளில் பனை விதைகள் மற்றும் கரைகளை பலப்படுத்தும் மரக்கன்றுகள் நடப்பட்டன.  பயனுள்ள இந்த செயலை ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகவும் பாராட்டினார்கள். வடுகபட்டி பசுமை வடுகை மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

 

 

 

Leave a Response