மரம் நடும் விழா

1100 மரக்கன்றுகள் – எல். எஸ். மில் நிர்வாகம்

241 views

நமது முதன்மை குறிக்கோளான மரக்கன்றுகள் நடுவதற்கு, நமக்கு உறுதுணையாக தேனி மாவட்டத்தின் எல். எஸ். மில் நிர்வாகம் பசுமை வடுகையை ஊக்கப்படுத்தும் விதமாக 1100 மரக்கன்றுகள் நமது வசம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த மரக்கன்றுகள் நமது வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மர கன்றுகள் நன்கொடை அளித்த எல். எஸ். மில் நிர்வாகத்தினருக்கு கோடான கோடி நன்றிகள்.

மேலும் இந்த மரக்கன்றுகளை நடுவதற்கு (மியாவாக்கி 2 )அதற்கான இடத்தை தேர்வு செய்து, மரம் நடுவதற்கான நாள் அறிவிக்கப்படும்.

Leave a Response