மரம் நடும் விழா

குறைந்த இடத்தில் அடர்ந்த வனம்

262 views

பசுமை வடுகை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி சார்பாக 10-8-2019 சனிக்கிழமை வடுகபட்டி வராக நதி மேம்பாலம் புதிய கழிப்பறை அருகில் “குறைந்த இடத்தில் அடர்ந்தவனம்” தொழில் நுட்ப முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டது, தற்போது அவைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

இதை தொடர்ந்து மியவாக்கி 2 உருவாக்கும் முயற்சியில் பசுமைவடுகை ஈடுபட்டு உள்ளது, வடுகபட்டி பேரூராட்சி உதவியுடன் பூர்வங்கப்பணியில் நீர் நிலை மேலாண்மை மற்றும் குறு இடத்தில் அடர்வனம் அமைப்பதில் நிபுணத்துவம் கொண்ட,திரு.சக்தி (Rainman) அடர் வனம் அமையும் இடத்தில் பணிகளை பார்வை இட்டும் மற்ற ஆலோசனைகளையும் வழங்கினார் . திரு.சக்தி அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த அடர்வனத்தில் தேனி L .S .மில்ஸ் நிர்வாகத்தின் சார்பாக 1000 மரக்கன்றுகள் வழங்க உள்ளார்கள்,இந்த மரம் வளர்க்கும் விழா மிக விரைவில் நடைபெறும், பணிகள் மிகவும் வேகமாக நடைபெறுகிறது .

Leave a Response