தினத்தந்தி அறக்கட்டளை – 2017
நம் பள்ளி மாணாக்கர்களின் சாதனை!
தேனி மாவட்டம், வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும், ஶ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் சி.அர்ச்சனா, மீ.சத்தீஸ்வரி ஆகியோர் கடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றமைக்காக தினத்தந்தி அறக்கட்டளையின் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் திரு.டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ் அவர்களின் திருக்கரங்களால் ரூ.10000 பரிசு பெற்று நம் பள்ளிக்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவிகளுக்கு நம் பள்ளி, ஊர் பொதுமக்கள் மற்றும் பசுமை வடுகையின் சார்பில் வாழ்த்துக்கள் !!!